கல்லூரிப் பாடல்
வாருங்கள் ! வாருங்கள் ! வாழ்ந்துகாட்டுவோம் !!
சிறகுகள் விரிக்க; சிந்தனை அளக்க;
உறவுகள் இனிக்க உயர்வுகள் பெருக
வாழ்ந்து காட்டுவோம் ! வாழ்ந்து காட்டுவோம் !
சாதனை படைக்க; போதனை கிடைக்க
இலட்சியம் சிறக்க; சத்தியம் நிலைக்க;
வாருங்கள் வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம் !
கல்வி கேள்வி கலைகள் கணினியாவும்
இங்கே உண்டு
அருமையான ஆசான் எனும் உறவும் இங்கே உண்டு
வண்ண வண்ண கனவுகளை வாழ்வினில் பதிக்க
என்ன வேண்டும்?
எவைகள் வேண்டும்?
எடுத்துச் செல்லுங்கள்
எண்ணில்லாவளங்கள் பெற்று உலகை வெல்லுங்கள் இவை
அனைத்தையும் வழங்கும் மந்திரக்கோலாம் நமது கல்லூரி
ஸ்ரீ கிருஷ்ணசாமி கல்லூரி
ஸ்ரீ கிருஷ்ணசாமி கல்லூரி
ஸ்ரீ கிருஷ்ணசாமி கல்லூரி
